அதை உருவாக்குவோம்
1
நடுத்தர அளவு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும்.
2
கொதிக்கும் தண்ணீரில் கருப்பு தேயிலைத் தூளைச் சேர்த்து, தேநீர் அடர்ந்த அம்பர் நிறமாக மாறும் வரை சுமார் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
3
தயாரித்த தேநீரில் இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் மற்றும் கொதித்தாறிய பால்(பயன்படுத்துகின்றீர்களெனின்) சேர்த்து கலக்கவும்.
4
கலவையை மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அவ்வப்போது பாத்திரத்தை மெதுவாக சுழற்றவும்.
5
பத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து, கவனமாக தேநீரை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி, பின்னர் மீண்டும் முதல் பாத்திரத்திற்கென மாற்றி மாற்றி ஊற்றி கலக்கவும்.
6
இந்த செயல்முறையை பல முறை மீண்டும் செய்யவும், ஒவ்வொரு முறையும் ஊற்றும் உயரத்தை அதிகரித்த வண்ணம் தேநீர் நுரைக்கும் வரையில் செய்யவும்.
7
இந்த செயல்முறையானது தேநீருக்கு கிரீமியான மற்றும் நுரையுடன் கூடிய வடிவமைப்பைப் பெற்றுக்கொடுக்கின்றது.
8
நுரைத்தத் தேநீரை சூடாக பரிமாறி மகிழுங்கள்