Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பயன்பாட்டிற்கான விதிமுறைகள்

  1. ஏற்றுக் கொள்ளக்கூடிய பயன்பாடு

    எங்கள் வலைத்தளத்தை ஆராய்ந்து பெறக்கூடிய பதிவுகளுக்கு அதாவது வினாக்கள், குறிப்புக்கள், பல்லூடக உள்ளடக்கங்கள் ஆகியவற்றிற்கு உங்கள் பங்களிப்பினை வழங்கவும் (உதாரணம் :

    படங்கள், காணொளிகள்). இருப்பினும் வலைத்தளத்தின் பயன்பாடு மற்றும் அங்கு பதியப்படும் விடயங்கள் எந்தவொரு காரணத்தைக்கொன்றும் சட்ட விரோதமாகவோ அல்லது அவமதி;ப்புக்குரியதாகவோ இருக்கக்கூடாது.

    செய்யக்கூடாதவை:

    a) வேறொரு நபரின் தனியார் உரிமையை மீறுதல்.
    b) அறிவு சார் சொத்துரிமையை மீறுதல்.
    c) வன்முறைகளுக்கு தூண்டக்கூடிய ஆபாசத்துடன் தொடர்புடைய அவதூறான அறிக்கைகளை வெளியிடுதலும்இ அவற்றிற்கு தூண்டுதலும் (Nestle உட்பட).
    d) வைரஸ் தாக்கங்களைக் கொண்ட கோப்புகளை பதிவேற்றுதல் பாதுகாப்பு தொடர்பிலான சிக்கல்களை தோற்றுவிக்கும்இ அல்லது.
    e) வலைத்தளத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும்.

    சட்ட விரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உள்ளீட்டினையும் நேளவடந அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

  2. தரவு பாதுகாப்பு எமது தனியார் அறிவுறுத்தலானது வலைத்தளத்தில் பகிரப்பட்ட அனைத்து தனிநபர் தரவு மற்றும் பதிவுகளுக்கும் பொருந்தும். மேலும் அறிய
  3. அறிவு சார் சொத்து
    1. Nestle யினால் வழங்கப்பட்ட உள்ளடக்கங்கள்

      Nestle அல்லது அதன் சார்பாக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிவுகளிலும் உள்ள பதிப்;புரிமை, வியாபாரக்குறி (உதாரணம்; : எழுத்துக்கள் மற்றும் உருவகப்படங்கள்) உட்பட அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் Nestle மற்றும் அதன் உரிமைதாரர்களுக்கு மட்டுமே சொந்தமானவை.

      உங்கள் தனிப்பட்ட உபயோகத்திற்காக வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டவற்றை மீள் உருவாக்கம் செய்ய முடியும் (உதாரணம்: வணிக ரீதியான பயன்பாடற்றவை) அவ்வாறான உள்ளடக்கத்தில் தோன்றக்கூடிய பதிப்புரிமை, அறிவிப்பு உட்பட அனைத்து அறிவு சார் சொத்துரிமைகளை மதிக்கவும், வைத்திருக்கவும் முடியும்.

    2. நீங்கள் வழங்கிய உள்ளடக்கங்கள்

      Nestle வலைத்தளத்திற்கு உங்களால் வழங்கப்படும் உள்ளீடுகளுக்கு நீங்களே உரிமையாளர்கள் என்பதை இங்கு நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். அல்லது உங்களுக்கான உள்ளீடுகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. (அதாவது, உரிமைதாரர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது) மற்றும் இவ் வலைத்தளத்திற்கு உங்களால் உள்ளீடுகளை பங்களிக்கவும் முடியும். (உதாரணம்: படங்கள், காணொளிகள், இசைகள்)

      உங்களால் வழங்கப்படும் இவ் உள்ளீடுகள் பாதுகாப்பற்றதாகவும் கருதப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதோடு Nestle நிறுவனத்திற்கும், அதன் வணிக நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்ட உள்ளீடு தொடர்பான இலவச ஆதாய உரிமை, நிரந்தர உரிமை மற்றும் உலகளாவிய உரிமத்தையும் வழங்குகிறீர்கள் என்பதையும் இங்கு ஒப்புக்கொள்கிறீர்கள். (வெளியீடு, மீள் உருவாக்கம், பரிமாற்றம், பதிப்பு, ஒளிபரப்பு உட்பட)

      குறித்த உள்ளீடுகளை பயன்படுத்தல் தொடர்பான தீர்மானங்கள் Nestle நிறவனத்தினால் மட்டுமே மேற்கொள்ள முடியும். Nestle இது போன்ற வேறு சில மாதிரி உள்ளீடுகளை பிற மூலங்களிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆகையால் இவ்விடயம் தொடர்பான அனைத்து அறிவு சார் சொத்துரிமைகளும் Nestle மற்றும் அதன் உரிமைதாரர்களுக்கு மட்டுமே உரியவை.

  4. பொறுப்பு

    Nestle நிறுவனமானது எமது வலைத்தளத்தின் பிரிவுகள் அனைத்தையும் துல்லியமாக உறுதிப்படுத்தவும் இடையூறுகளை கையாளவும் சிறந்த நியாயத்துவம் வாய்ந்த முறைகளையே கையாளுகின்றது. இடை நிறுத்தங்கள் பிழையான தகவல்கள்இ இடையூறுகள் மற்றும் நேரடியாகவோ (உதாரணம்: கணனி செயலிழப்பு) அல்லது மறைமுகமாகவோ (உதாரணம்: இலாபம் அல்லது நட்டம்) சேதம் விளைவிக்கக்கூடிய பிற நிகழ்ச்சிகளுக்கு நேளவடந நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த வலைத்தளத்திற்கான பதிவுகளின் நம்பகத்தன்மையானது உங்களின் சொந்த இடர் தொடர்பானது.

    இந்த வலைத்தளமானது Nestle நிறுவனத்திற்கான வெளி இணைப்புகளையும் கொண்டிருக்கக்கூடியது. அத்தகைய மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் மீது Nestle எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கான எவ்வித வலியுறுத்தல் பொறுப்பினையும் Nestle நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது. அதாவது, அவற்றின் உள்ளீடுகள், துல்லியமான செயற்பாடு உட்பட அனைத்திற்கும் நேளவடந நிறுவனம் பொறுப்பேற்காது. இதன் காரணமாக இது போன்ற மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் சட்ட அறிவுறுத்தல்களையும் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவற்றை உங்களுக்கு அறியப்படுத்துவது தொடர்பிலும் கவனமாக மதிப்பாய்வு செய்யுமாறும் வேண்டப்படுகிறீர்கள்.

    நீங்கள் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை இயக்குபவராகவும் அத்தளங்களை எம் வலைத்தளத்துடன் இணைக்க விரும்புபவராகவும் இருப்பின் Nestle அவ்வகையான இணைப்பினை ஏற்காதுஇ மற்றும் நீங்கள் Nestle உடன் இணைந்த எவ்வித வலியுறுத்தலையும் பரிந்துரைக்கவும் முடியாது. மேலும் நீங்கள் Framing மற்றும் அதனை ஒத்த நடவடிக்கைகளை பயன்படுத்தி வலைத்தள இணைப்பினை மேற்கொள்ள முடியாது. இத்தகைய செயற்பாட்டின் போது வலைத்தள இணைப்பு புதிய சாளரத்தில் திறக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்க.

  5. தொடர்புகளுக்கு

    இவ் வலைத்தளம் Nestle Lanka PLC நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றது.

    இந்த வலைத்தளம் தொடர்பான உங்கள் வினாக்கள் மற்றும் பதிவுகளை எமக்கு தெரியப்படுத்துங்கள்.

    தொலைபேசி : +94114724724

    மின்னஞ்சல் முகவரி :talk.tous@lk.nestle.com

    தபால் முகவரி :Nestle Lanka PLC
    440, டி. பி. ஜாயா மாவத்தை,
    கொழும்பு 10.
    இலங்கை.

  6. மாற்றங்கள்

    Nestle நிறுவனம் இந்த பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர உரிமையுடையது. இவை தொடர்பான மாற்றங்களையும் புதிய விடயங்களையும் மதிப்பாய்வு செய்ய இப்பக்கத்தை பார்க்கவும்.

  7. அரச சட்டதிட்டங்கள் மற்றும் அதிகாரங்கள்

    இவ் வலைத்தளம் இலங்கையிலுள்ள பயனர்களுக்கு மட்டுமானது. இந்த வலைத்தளத்தின் தயாரிப்புக்கள் மற்றும் உள்ளீடுகளை இலங்கையைத் தவிர வேறு இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு இடங்களுக்கும் பொருந்தும் என்பதற்கான எவ்வித சான்றையும் Nestle நிறுவனம் வழங்கவில்லை. இவ் வலைத்தளத்துடன் தொடர்புடைய அனைத்து விதமான உரிமைக்கோறல்களும் சர்ச்சைகளும் இலங்கை சட்டத்தால் நிர்வாகிக்கப்படுவதுடன் இவை தொடர்பான விடயங்கள் மீறப்படின் இலங்கையில் கொழும்பு நீதிமன்றின் முன் கொண்டு வரப்படும் என்பதையும் அறிந்தவராக இச்சட்ட திட்டங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை அறியத்தருகிறோம்.

Sign up Now

இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.