அதை உருவாக்குவோம்
1
சவ்வரிசியை தண்ணீரில் நன்றாக அலசி எடுக்கவும்.
2
கோப்பை தண்ணீரில் சவ்வரியை சேர்த்து, அது கண்ணாடி பதத்தினை எட்டும் வரை (சுமார் 10-15 நிமிடங்கள்) மிதமான சூட்டில் சமைக்கவும்.
3
அடிப்பிடிப்பதை தவிர்க்க அடிக்கடி கிளறவும். சமைத்த பின், வடிகட்டி குளிர்ந்த தண்ணீரால் கழுவுவதனூடாக மேலதிக மாத்தன்மையை நீக்கவும்.
4
தேநீர் தயாரித்தல்: வேறொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
5
தேயிலைத் தூள் அல்லது tea bag சேர்த்து 2-3 நிமிடங்கள் (உங்களுக்கு விருப்பமான சாய அளவிற்கு) கொதிக்க விடவும்.
6
தேயிலைத் தூள் பயன்படுத்தினால், தேநீரை வடிகட்டி எடுக்கவும்.
7
அனைத்தையும் ஒன்றிணைத்தல்: ஒரு கண்ணாடி கோப்பையில் சமைத்த சவ்வரிசியை சேர்த்து சூடான தேநீரை அதன் மேல் ஊற்றவும்.
8
3-4 மேசைக்கரண்டி இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் செர்த்து கிளறவும் (இனிப்பை உங்கள் விருப்பத்திற்கேற்ப சரிசெய்யவும்).
9
எண்ணம் போல பரிமாறி இதயம் உணர பருகி மகிழவும்