அதை உருவாக்குவோம்
1
மசாலாக்கலவையை தயார் செய்தல்: சிடிய உலக்கையில் ஏலக்காய், கிராம்பு, கருவாப்பட்டை மற்றும் மிளகு சேர்த்து லேசாக இடித்துக்கொள்ளுங்கள்.
2
ஒரு பாத்திரத்தில் மசாலாக்கள்,நறுக்கிய இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
3
நறுக்கிய இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
4
இதமான சூட்டில் கொதிக்கவிட்டு கொதித்ததும் சூட்டை குறைத்து 5 நிமிடங்களுக்கு மசாலாக்களின் சுவை ஊறும் படியாக அடுப்பில் இருக்க விடுங்கள்.
5
அந்த கலவையில் தேயிலை அல்லது tea bags’களை சேருங்கள்.
6
நீங்கள் விரும்பும் சாயத்தின் அளவிற்கேற்ப மேலதிகமாக 3-5 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள்.
7
இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் மற்றும் கொதித்தாறிய பால்(பயன்படுத்துகின்றீர்களெனின்) சேறுங்கள்.
8
நன்றாக கலந்ததன் பின்னர் கொதியாமல் சூடாக்குங்கள்.
9
சுவை பார்த்து சீனி தேவைப்படின் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10
பாத்திரத்திலிருந்து தேனீரை அகற்றி மசாலாக்களை வடிகட்டி வீட்டில் தயாரித்த மசாலா சாய் இனை பாசமும் தித்திப்பும் ஒழுக சுடச்சுட பரிமாறுங்கள்.