அதை உருவாக்குவோம்          
        
                  
            
              
            
            
              சீனியைப் பாரமான பாத்திரமொன்றில் இட்டு அளவான சூட்டில் கரமல் நிறம் வரும் வரை (10 நிமிடங்கள்) துளாவியவாறு உருக்கவும். கெரமல் நிறமடைந்ததும் 8 அங். வட்டமான பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றவும். கொடுக்கியின் உதவியு'டன் பாத்திரத்தின் அடிவரை கெரமலைப் பூசவும்.
            
           
                  
            
              
            
            
              அவணின் வெப்பத்தை 160°c அளவில் வைக்கவும்.
            
           
                  
            
              
            
            
              முட்டை MILKMAID தேங்காய் பால் நீர் தேங்காய் தூவல் மற்றும் உப்பை பெரிய பாத்திரத்தில் இட்டு கலக்கிக் கொள்ளவும். ஏற்கனவே தயாhpக்கப்பட்ட பாகினை 13ஒ9 அங். பேக்கிங் தட்டில் ஊற்றவு'. MILKMAID கலவையையும் இடவும்.
            
           
                  
            
              
            
            
              பெரிய பேக்கிங் பாத்திரத்தில் 1 அங். த்திற்கு கொதிக்கும் நீரை இடவும். 50-55 நிமிடங்களுக்கு அல்லது கஸ்ராட் இறுகும் வரை பேக் செய்யவும். சுடு நீரிலிருந்து கவனமாக தட்டை அகற்றவும். ஒரு மணித்தியாலத்திற்கு வயர் றக்கில் ஆற விடவும். மூடிய பின் இரவு முழுவதும் குளிர வைக்கவும்.
            
           
                  
            
              
            
            
              பரிமாறுவதற்கு: பரிமாறும் தட்டொன்றில் கத்தரித்த பின் மறுபுறமாக வைக்கவும். பிளான் மீது கரமல் சோசை கரண்டியால் விடவும். விப்ட் கிறீம் மற்றும் வறுக்கப்பட்ட தேங்காய்த் தூவலைப் பயன்படுத்தி அழகுபடுத்தவும்.
            
           
                
                          
            
              ஊட்டச்சத்து உண்மைகள்            
            ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன