Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

அப்பிள் கிரம்பிள்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

25 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • அப்பிள்கள் (தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்டது) 4
  • MILKMAID 100g
  • பட்டர் 25g
  • சீனி 25g
  • கறுவா (அரைத்தது) 1 தே.க.
  • கிரம்பிள்:
  • மா 200g
  • சீனி (½ வெள்ளை ½ பிறவுண்) 150g
  • கறுவா 1 தே.க.
  • பட்டர் 150g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 338.0 kcal
  • கார்போஹைட்ரேட் : 48.1 g
  • புரதம் : 4.8 g
  • கொழுப்பு : 13.9 g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் பட்டரை உருக்கி அப்பிள்களைச் சேர்த்து மென்மையாகும் வரை சமைக்கவும். அவசியமானால் சிறிதளவு நீரைச் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சீனி, MILKMAID மற்றும் பட்டரைச் சேர்க்கவும்.
2
கிரம்பிள் செய்வதற்கு: ஒரு பாத்திரத்தில் மாவை இடவும். பட்டரைச் சேர்த்து பாண் மொறுமொறுப்பு வரும் வரை கைகளால் பிசையவும்.
3
மிகுதியான சேர்மானங்களுடன் சீனியைச் சேர்த்து கலக்கவும். அவணுக்குள் இடக்கூடிய பாத்திரத்தில் அப்பிள் கலவையை இட்டு ஏறக்குறைய 1 செ. மீ. தடிப்பம் வரை கிரம்பிளை விசிறவும்.
4
அவணை 200°c வெப்பத்தில் வைத்து 20-25 நிமிடங்களுக்கு சமைக்கவும். சீனியைத் தூவவும். உறைவான கிறீம் அல்லது வனிலா ஐஸ்கிறீமுடன் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C மற்றும் விட்டமின் B6 போன்ற antioxidants மூலங்களை ஆப்பிள் கொண்டிருக்கின்றது. நார்ச்சத்து உணவுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.