Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற் அன்ட் பனானா பான்கேக்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

30 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 3 மே.க.
  • பிளேய்ன் மா 1 கப்
  • சீனி (பவுடராக்கியது) 1/3 கப்
  • முட்டைகள் (அடித்தது) 2
  • MAGGI தேங்காய்ப் பால்மா 2 தே.க.
  • பட்டர் (உருகியது) 5-6 தே.க.
  • வனிலா எசன்ஸ் ½ தே.க.
  • வாழைப்பழங்கள் (துண்டுகளாக்கியது) 2
  • உப்பு ஒரு பிடி

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 169 kcal
  • கார்போஹைட்ரேட் 21.5 g
  • புரதம் 1.9 g
  • கொழுப்பு 8.2 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, சீனி, முட்டைகள், தேங்காய்ப் பால்மா, பட்டர், வனிலா எசன்ஸ் மற்றும் ஒரு பிடி உப்புடன் ஒரு பெரிய பாத்திரத்தில் மாவைச் சேர்த்து அரிக்கவும். கலக்கும் வரை நன்றாக ஆட்டவும். பின் அறை வெப்பநிலையில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
2
பான் கேக்குகளைச் சமைக்கத் தொடங்குவதற்கு முன் மாக்கலவையின் பதத்தைப் பரிசோதிக்கவும். கலவை அதிகம் தடிப்பாக இருந்தால் சிறிதளவு சுடுநீர் சேர்க்கவும்.
3
ஒட்டாத எண்ணெய் தட்டொன்றை மேலதிக உருகிய பட்டரால் பிரஸ் செய்யவும். நடுத்தர வெப்பத்தில் சூடாக்கவும். தட்டின் அடித்தளத்தில் பரவக்கூடியதாக போதுமான அளவு மாக்கலவையை ஊற்றவும். ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாகும் வரை 1-2 நிமிடங்களுக்கு சமைக்கவும். ஒரு தட்டில் எடுத்து சூடாக்கவும். மிகுதியான கலவையையும் இவ்வாறு செய்து 12 பான் கேக்குகளைத் தயாரிக்கவும்.
4
பரிமாறுவதற்காக தட்டொன்றில் கிறீப் பேப்பரை முக்கோணமாக மடித்து வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மூடவும். சொக்லேற் சோஸ் மற்றும் கிறீமைத் தூவவும

ஊட்டச்சத்து உண்மைகள்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.