Buy Now

Ramadan Delights with MILKMAID (MILKMAID உடன் மகிழ்ச்சியான ரமழான்) பயன்பாட்டு விதிமுறைகள்

  1. Nestlé Lanka PLC, (இதன் பின்னர் “Nestlé” எனக் குறிப்பிடப்படும்) நிறுவனமானது MILKMAID இற்காக “Ramadan Delights with Milkmaid”( MILKMAIDஉடன் மகிழ்ச்சியான ரமழான்) (இலகுவாக குறிப்பிடுவதற்காக இதன்பின்னர் “பிரச்சாரம்“ என்று பயன்படுத்தப்படும்) என்ற பிரச்சாரத்தை டிஜிட்டல் ஊடகங்கள் ஊடாக நடத்துகின்றது.
  2. இந்த பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை செல்லுபடியாகும் (இதன்பின்னர் “பிரச்சார காலம்” என குறிப்பிடப்படும்). பங்கேற்பாளர்கள் தமது நுழைவு அனுமதி / சமர்ப்பித்தல் நடவடிக்கைகளை இந்த பிரச்சார காலத்திற்குள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட பிரச்சார காலத்தில் மட்டுமே இப்பிரச்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  3. இந்த பிரச்சார நடவடிக்கையில் கலந்துகொள்வது அவரவர் விருப்பதிற்குரியது மற்றும் தன்னார்வமானது.
  4. Nestlé, அதன் இணை நிறுவனங்கள், அதன் விளம்பர முகவர் நிலையம் மற்றும் அதன் ஊடக பங்காளர்களின் ஊழியர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களை தவிர, இலங்கையின் அனைத்து பிரஜைகளும் இந்த பிரச்சாரத்தில் கலந்துகொள்ளலாம்.
  5. நுழைவு விதிமுறைக்கேற்ப பங்கேற்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
    1. இணையப் பகுதியை அடைய இணைப்பை (Link) தொடரவும்
    2. விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்யவும்
    3. Milkmaid பேணியுடன் (tin) செய்முறை தொடர்பான படமொன்றை பதிவேற்றவும்
    4. விசேடமான கதையை பகிரவும்
    5. நுழைவு அனுமதியை சமர்ப்பிக்கவும்
  6. விதிமுறைகளை பூர்த்திசெய்யாத மற்றும் பிரச்சார காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  7. பரிசுகளை பெற்றுக்கொள்வது தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் அல்லது பரிசுப் பொருட்களின் பற்றுச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால், Nestlé Lanka நுகர்வோர் சேவைகள் தொடர்பிலக்கமான (0094)0114724724 இற்கு தொடர்புகொள்ள வேண்டும்.
  8. எனினும், பரிசுபெற்றவர்களின் அலட்சியப்போக்கு மற்றும் செயற்பட தவறியமை தொடர்பான எந்தவொரு முறைப்பாட்டிற்கும் Nestlé பொறுப்பேற்காது.
  9. பரிசுகளை எவ்வாறு, எப்போது பெற்றுக்கொள்வதென வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
  10. வெற்றியாளர்கள் எழுமாற்றாக தெரிவுசெய்யப்படுவர். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான NESTLÉ இன் முடிவு அறுதியும் இறுதியுமானது. அத்தோடு, இது தொடர்பான வேறெந்த (கடிதம்/தொலைபேசி அழைப்பு) தகவல் பரிமாற்றங்களுக்கும் இடமில்லை.
  11. NESTLÉ நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் பரிசில்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.
  12. வெற்றியாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையின் நகல்பிரதி / ஒளிப்படம் மற்றும் NESTLÉ கோரும் தகவல்களை வழங்க வேண்டும்.
  13. பரிசுகளை வழங்குவது NESTLÉ நிறுவனத்தின் சரிபார்ப்புக்கு உட்பட்டது. வெற்றியாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியாயமாக செயற்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த NESTLÉ அடிப்படை கண்காணிப்பு தரங்களை பயன்படுத்தும். வெற்றியாளரின் நியாயத்தன்மையில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால் அத்தகைய வெற்றியாளர் அல்லது பங்கேற்பாளருக்கு எதிராக, எந்த நேரத்திலும் அவருக்கான பரிசை இரத்துச் செய்யும் உரிமை NESTLÉ நிறுவனத்திற்கு உண்டு.
  14. வெற்றியாளரை(களை) உள்ளக ரீதியில் உறுதிப்படுத்த முடியாவிட்டால் அல்லது தொடர்புகொள்ள முடியாவிட்டால் அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் அவர்கள் பரிசை பெற்றுச்செல்ல முடியாவிட்டால், வெற்றியாளருக்கு எவ்வித அறிவிப்பையும் விடுக்காமல் இன்னொரு பங்கேற்பாளருக்கு பரிசை வழங்குவதற்கான உரிமையை NESTLÉ கொண்டிருக்கும்.
  15. பங்கேற்பாளர் வெற்றிபெற்றதாக தொடர்புகொள்ளப்படாவிட்டால்/ தெரிவிக்காவிட்டால்/அறிவிக்கப்படாவிட்டால், தெரிவுசெய்யும் நடவடிக்கையின்போது அவரின் பெயர் தெரிவுசெய்யப்படவில்லை என்றும் அவர் / அவள் வெற்றியாளர் அல்லர் என்றும் அர்த்தமாகும்.
  16. பரிசினை பரிமாற்ற முடியாது
  17. இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம் NESTLÉ நிறுவனமானது தனது சுயவிளம்பரம், பதிப்பு, விளக்கக்காட்சி, தர ஆய்வு, சந்தை ஆராய்ச்சி, விளம்பரப்படுத்தல் மற்றும் / அல்லது வணிக நோக்கத்திற்காக மேலதிக ஒப்புதல், அனுமதி, இழப்பீடு மற்றும் காலவரையறையற்றது என்பதற்கான அறிவிப்பு எதுவும் இன்றி, வெற்றியாளரின் பெயர், ஒளிப்படம், நுழைவு மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்கின்றது.
  18. பிரச்சாரத்திற்காக பெறப்பட்ட எந்தவொரு உள்ளீடுகளையும் பயன்படுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் எந்தவொரு விடயத்தையும் NESTLÉ கருத்திற்கொள்ளாது.
  19. எவ்வித காரணத்தையும் கூறாமல் எந்தவொரு நுழைவு அனுமதியையும் நிராகரிக்க, அழிக்க அல்லது நீக்குவதற்கான உரிமையை NESTLÉ கொண்டுள்ளது. எந்தவொரு நுழைவு அனுமதியையும் நிராகரிப்பதற்கும், அழிப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் NESTLÉ எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் அறுதியும் இறுதியுமானது. அத்தோடு, எந்தவொரு சர்ச்சை அல்லது சவாலுக்கும் உட்படாது.
  20. சமூகத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக கருதப்படும் அல்லது எந்தவொரு மதம் அல்லது சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம், அதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய, அவதூறான, அநாகரிகமான, தவறான உள்ளடக்கம், சித்திர ஆக்கம் அல்லது மொழிப்பிரயோகம் என்பன நுழைவு அனுமதி உள்ளடக்கத்தில் இடம்பெறக்கூடாது. எந்த நேரத்திலும் அதன் விருப்பத்திற்கிணங்க எந்தவொரு நுழைவு அனுமதியை அல்லது பங்கேற்பாளரை கொண்ட பிரச்சாரத்தை இரத்துச் செய்ய அல்லது நீக்குவதற்கான உரிமையை NESTLÉ கொண்டுள்ளது. இதுதொடர்பாக NESTLÉ எடுக்கும் தீர்மானம் அறுதியும் இறுதியுமானதாகும்.
  21. மேற்கூறிய விடயங்களை பின்பற்ற பங்கேற்பாளர் தவறுகின்றமை, அவரது நுழைவு அனுமதியை பிரச்சாரத்திலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான உரிமையை NESTLÉஇற்கு வழங்குகின்றது.
  22. பிரச்சாரத்திற்காக அவர் / அவள் சமர்ப்பித்த உள்ளடக்கம், மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாகவோ அல்லது ஊறுபடுத்துவதாகவோ அமையாது என்பதை பங்கேற்பாளர் ஏற்றுக்கொள்கிறார். அது மீறப்படுகின்றமைக்கு பங்கேற்பாளர் மட்டுமே பொறுப்பாவார்.
  23. இந்த பிரச்சாரத்திற்காக பங்கேற்பாளரால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து நபர்/நபர்கள் மற்றும், அல்லது சொத்துரிமையாளரின் அல்லது சொத்தின் உருவப்படம்/ஒளிப்படத்தை பயன்படுத்துவதற்கு தேவையான அனுமதியை பெற்றுக்கொண்டதாக பங்கேற்பாளர் ஒப்புக்கொள்கின்றார். மூன்றாம் தரப்பிடமிருந்து இதுதொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் / முறைப்பாடுகள் எழுந்தால் அதற்கு பங்கேற்பாளரே பொறுப்பாவார். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும்/ மூன்றாம் தரப்பிடமிருந்தும்/ பங்கேற்பாளரிடமிருந்தும் கிடைக்கும் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளுக்கு NESTLÉ பொறுப்பாகாது.
  24. எந்தவொரு முன்னறிவித்தலும் / அறிவிப்பும் இன்றி இந்த பிரச்சாரத்தை பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ மீளப்பெற்றுக்கொள்ள, மாற்றியமைக்க, ஒத்திவைக்க, மாற்றங்களை ஏற்படுத்த அல்லது இரத்துசெய்ய அல்லது பொருத்தமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் மாற்றியமைக்க NESTLÉ நிறுவனத்திற்கு உரிமையுண்டு. அதனால் ஏற்படும் இழப்புகள் / சேதங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது. இந்த விடயத்தில் மற்றும் பொதுவாக இந்த பிரச்சாரம் மற்றும் அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் தொடர்பான NESTLÉஇன் எந்தவொரு தீர்மானமும் அறுதியும் இறுதியுமானது.
  25. இயற்கையான நிகழ்வுகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய படை நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் அல்லது சேதத்திற்கும் NESTLÉ பொறுப்பேற்காது. அத்தோடு, இவ்வாறான இழப்பிற்கு இழப்பீடு வழங்கவோ அல்லது வேறெந்த விடயத்தையும் மேற்கொள்ளவோ நிறுவனம் பொறுப்பாகாது.
  26. பிரச்சாரம் மற்றும் / அல்லது பிரச்சாரத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பங்கேற்பாளர் அதிருப்தி அடைந்தால் பிரச்சாரத்தில் பங்கேற்கக்கூடாது என்பதே அவரது / அவளுடைய ஒரே மற்றும் தனிப்பட்ட தீர்வாக அமையும்.
  27. வழங்கப்பட்ட முடிவுத்திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் நுழைவு அனுமதிகள் நிராகரிக்கப்புடும்.
Sign up Now

இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.