Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கிறீம் பவ்ஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • பால் 1/2 கப்
  • கோர்ண் பிளவர் 1 மே. க.
  • முட்டை மஞ்சட் கரு 1
  • பட்டர் ½ தே. க.
  • Vanilla essence 1/4 tsp.
  • கஜு நட்ஸ் (வறுத்து நறுக்கியது) 25g
  • றெய்சின்ஸ் 25g
  • பேஸ்ரி
  • பட்டர் 75g
  • நீர் 1 கப்
  • மா 125g
  • முட்டை (மெதுவாக அடித்தது) 4
  • வனிலா எசன்ஸ் 1 தே. க.
  • உப்பு ஒரு பிடி

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 94.1 kcal
  • கார்போஹைட்ரேட் : 10.2 g
  • புரதம் : 2.7 g
  • கொழுப்பு : 5.0 g

அதை உருவாக்குவோம்

1
சூக் பேஸ்ரி தயாரிப்பதற்கு: சோஸ்பானொன்றில் நீரையும் பட்டரையும் சேர்த்து பட்டர் உருகும் வரை கொதிக்கச் செய்யவும். வெப்பத்தைக் குறைத்து மாவினைக் கலக்கவும். கலவை தட்டின் பக்கங்களை விட்டு விலகி உருண்டைகளாக வரும் வரை நன்றாக அடிக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். 2-3 நிமிடங்கள் வரை ஆற வைக்கவும்.
2
முட்டைகளை குளிரான கலவையுடன் மெதுவாக சேர்க்கவும். வனிலா எசன்ஸ் மற்றும் உப்பினை இட்டு நன்றாகக் கலக்கவும். சிறிய கரண்டியால் பேஸ்ரியை எடுத்து பேக்கிங் தட்டில் வைக்கவும்.
3
அவணில் 180°C வெப்பத்தில் 30 நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாக வரும் வரை பேக் செய்யவும். சிறிதளவு பாலில் கோர்ண் பிளவரைக் கலக்கவும்.
4
சோஸ்பான் பாத்திரத்தில் MILKMAID மற்றும் எஞ்சியுள்ள பாலைக் கலக்கவும். பாலைச் சூடாக்கவும். கோர்ண் பிளவர் பேஸ்ட்டினையும் சேர்த்து, மெல்லிய தீச்சுவாலையில் சமைக்கவும். கஸ்டர்ட் தடிப்பாக வரும்வரை தொடர்ச்சியாக கலக்கவும்.
5
எஞ்சியுள்ள சேர்மானங்களையும் சேர்த்து அடிக்கடி கலக்கவும். பவ்பினைப் பிரித்து குளிரான கஸ்டர்டினால் உள்ளே நிரப்பவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

சிறந்த உடற்செயற்பாட்டை பேணுவதற்கு முக்கியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள், மற்றும் ஒட்சிசனேற்ற மூலங்கள் என்பன முந்திரியில் நிறைந்துள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்