drip
bestweb award
BUY NOW

ரெட் வெல்வெற் கப்கேக்ஸ்

மொத்த நேரம்
40 நிமி.
தயாரிக்க எடுக்கும் நேரம் 40 நிமி.
சமைத்தல் 0 நிமி.
பகிர்வது 15
போஷாக்கு தகவல்
சக்தி
:208.8 kcal
கார்போஹைட்ரேட்
:25 g
புரதம்
:4.11 g
கொழுப்பு
:10.3 g
ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

icon சேர்மானங்கள்
MILKMAID
¾ சிறிய டின்
பட்டர்
150g
பால்
50ml
கொக்கோ பவுடர்
1 மே.க.
வனிலா எசன்ஸ்
1 தே.க.
சிவப்பு நிற உணவு கலரிங்
2 மே.க.
உப்பு
ஒரு பிடி
அப்பச் சோடா
½ தே.க.
பேக்கிங் பவுடர்
1 தே.க.
மா (அரித்தது)
250g
யோகட்
150g
சிவப்பு வினாகிரி
1 மே.க.
கிறீம் சீஸ் பொரஸ்டிங்
MILKMAID
½ சிறிய டின்
கிறீம் சீஸ்
400g
விப்ட் கிறீம்
100g
icon செய்முறை

1

பட்டரை கிறீமாக்கி MILKMAID உடன் மெல்லியதாக சேர்த்து அடிக்கவும். வனிலா எசன்ஸை சேர்க்கவும்.

2

இன்னொரு பாத்திரத்தில் கொக்கோ மற்றும் சிகப்பு நிற உணவு கலரிங்கை சேர்த்து ஒரு பேஸ்ற் செய்யவும். பட்டர் மிக்சருடன் கலக்கவும்.

3

மீதமுள்ள உலர் சேர்மானங்களை சேர்த்து அரிக்கவும். இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். உலர்ந்த சேர்மானங்களையும் யோகட்டையும் பட்டர் கலவையுடன் சேர்க்கவும். மிகுதியாகவுள்ள யோகட்டை மாக்கலவையுடன் கலக்கு முன் சிவப்பு வினாகிரியுடன் கலக்கவும்.

4

நன்றாக கலக்கும் வரை பாலையும் சேர்த்து கலக்கவும்.

5

அவணை முன்கூட்டியே சூடாக்கவும். கப் கேக் தட்டை தயார் செய்யவும்.

6

160°C அளவு வெப்பத்தில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். றக் ஒன்றில் முழுமையாக ஆற விடவும்.

7

கிறீம் சீஸை அடிக்கவும். அடிக்கும் போதே MILKMAID ஐ மெல்லியதாக சேர்க்கவும்.

8

விப்ட் கிறீமையும் சேர்க்கவும். விருப்பம் போல அலங்கரிக்கவும்.

icon