நீரைக் கொதிக்க வைத்த பின்னர், கோப்பிப் பவுடரை சேர்த்து, கோப்பியைத் தயாரிக்கவும்.
கோப்பியில் பிஸ்கட்டுகளை அமிழ்த்தவும். ஒரு தடவையில் ஒரு பிஸ்கட்டை அமிழ்த்திää ஆழம் குறைந்த பரிமாறும் தட்டின் அடிப்பாகத்தில் அல்லது தனித்தனி கிளாஸ்களில் ஒழுங்குபடுத்தவும்.
2
MILKMAID, பட்டர் மற்றும் கொக்கோ பவுடரை ஒன்று சேர்த்து சொக்லேற் பட்டர் பேஸ்ற்றைத் தயாரிக்கவும்.
3
பிஸ்கட் லேயர் மீது சொக்லேற் பட்டர் பேஸ்ற்றைப் பூசவும். மீண்டும் பூசவும். சகல பிஸ்கட்டுகளும் முடியும் வரை இதே போல அதிக பிஸ்கட்டுகளால் லேயரை மூடவும். மேலேயுள்ள பிஸ்கட் லேயர் மீதும் இந்தப் பேஸ்ற்றைப் பூசவும்.
கஜு நட்ஸ்களால் அலங்கரித்த பின், குளிரூட்டவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
கொக்கோவில் இருந்து வரும் கொக்கோ தூள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்பவற்றையும் வழங்குகின்றது.