அதை உருவாக்குவோம்
அரிசி, கறுவாப்பட்டை, லெமன் செஸ்ட் மற்றும் முழுக் கராம்பு என்பவற்றை சோஸ்பான் ஒன்றில் 1 மணித்தியாலத்திற்கு நீரில் இட்டு ஊற விடவும்.
ஊறிய பின், அரிசிக் கலவையை உயர் வெப்பத்தில் மூடாமல் சூடாக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது (ஏறக்குறைய 5 நிமிடங்களில்) வெப்பத்தை நடுத்தர அளவிற்குக் குறைக்கவும். 10-12 நிமிடங்களுக்கு அதிகமாக அல்லது நீர் முழுவதும் ஆவியாகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
அரிசி வேகும் போதே பாலைச் சேர்த்து நன்றாக கலக்கவும். வனிலா எசன்ஸ் மற்றும் MILKMAIDஐ அரிசியுடன் சேர்த்து ஏறக்குறைய 25-35 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் சிறிதளவு கெட்டியாகும் வரை அல்லது உங்களுக்கு விருப்பமான பதம் வரும் வரை சமைக்கவும்.
திறந்தபடியே ஆற விடவும்.
குறிப்பு: அவிந்த அரிசி ஆறும் போது அதன் தடிப்புத்தன்மை பற்றி கவனமாக இருக்கவும். இந்த றைஸ் புடிங் வழமையான றைஸ் புடிங்கிலும் பார்க்க தடிப்புத்தன்மை குறைந்ததாக இருக்கும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பாஸ்மதி அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சமிபாட்டுக்கு உதவும் மிகவும் முக்கியமான மூலப்பொருளாக நார்ச்சத்து உள்ளது.