அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் புளுபெர்ரி ஜெலி மற்றும் சூடான நீரை (500 மி.லி.) சேர்க்கவும். நன்கு கிளறவும். குளிரவிடவும்.
2
புளூபெர்ரி ஜெலியை குளிர்சாதனப்பெட்டியில் 2-4 மணிநேரம் முழுமையாக இறுகிடும் வரை வைக்கவும்.
3
ஒரு பாத்திரத்தை எடுத்து சூடாக்கவும். பின்னர் Milkmaid, நீர், ஜெலட்டின் சேர்த்து நன்கு கிளறவும்.
4
மேலே உள்ள Milkmaid கலவையை ஒரு தனி கிண்ணத்தில் ஊற்றி குளிர விடவும். குளிர்சாதனப்பெட்டியில் 2-4 மணிநேரம் வைக்கவும்.
5
குளிரூட்டப்பட்ட புளுபெர்ரி ஜெலியை எடுத்து சிறிய துண்டுகளாக பிரித்தெடுக்கவும்.
6
இறுதியாக, விரும்பிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி அலங்கரிக்கவும் அல்லது பரிமாற முன் உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும்.