Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

றைஸ் புடிங்

Rating

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • tin MILKMAID 1 சிறிய டின்
  • பாஸ்மதி அரிசி 1 கப்
  • கறுவா பட்டைகள் 2
  • லெமன் செஸ்ட் 1 மே.க.
  • முழு கராம்பு 3
  • நீர் 4 கப்
  • பால் 3 கப்
  • வனிலா எசன்ஸ் 1 மே.க.
  • றெய்சின்ஸ் விரும்பியளவு ½ கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 331 kcal
  • கார்போஹைட்ரேட் 49.7 g
  • புரதம் 9.8 g
  • கொழுப்பு 10.2 g

அதை உருவாக்குவோம்

அரிசி, கறுவாப்பட்டை, லெமன் செஸ்ட் மற்றும் முழுக் கராம்பு என்பவற்றை சோஸ்பான் ஒன்றில் 1 மணித்தியாலத்திற்கு நீரில் இட்டு ஊற விடவும்.
ஊறிய பின், அரிசிக் கலவையை உயர் வெப்பத்தில் மூடாமல் சூடாக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது (ஏறக்குறைய 5 நிமிடங்களில்) வெப்பத்தை நடுத்தர அளவிற்குக் குறைக்கவும். 10-12 நிமிடங்களுக்கு அதிகமாக அல்லது நீர் முழுவதும் ஆவியாகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
அரிசி வேகும் போதே பாலைச் சேர்த்து நன்றாக கலக்கவும். வனிலா எசன்ஸ் மற்றும் MILKMAIDஐ அரிசியுடன் சேர்த்து ஏறக்குறைய 25-35 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் சிறிதளவு கெட்டியாகும் வரை அல்லது உங்களுக்கு விருப்பமான பதம் வரும் வரை சமைக்கவும்.
திறந்தபடியே ஆற விடவும். குறிப்பு: அவிந்த அரிசி ஆறும் போது அதன் தடிப்புத்தன்மை பற்றி கவனமாக இருக்கவும். இந்த றைஸ் புடிங் வழமையான றைஸ் புடிங்கிலும் பார்க்க தடிப்புத்தன்மை குறைந்ததாக இருக்கும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

பாஸ்மதி அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சமிபாட்டுக்கு உதவும் மிகவும் முக்கியமான மூலப்பொருளாக நார்ச்சத்து உள்ளது.