Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ரெட் வெல்வெற் கப்கேக்ஸ்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¾ சிறிய டின்
  • பட்டர் 150 grams
  • பால் 50 ml
  • கொக்கோ பவுடர் 1 மே.க.
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • சிவப்பு நிற உணவு கலரிங் 2 மே.க.
  • உப்பு ஒரு பிடி
  • அப்பச் சோடா ½ தே.க.
  • பேக்கிங் பவுடர் 1 தே.க.
  • மா (அரித்தது) 250 grams
  • யோகட் 150 grams
  • சிவப்பு வினாகிரி 1 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 208.8 kcal
  • கார்போஹைட்ரேட் 25 g
  • புரதம் 4.11 g
  • கொழுப்பு 10.3 g

அதை உருவாக்குவோம்

கிறீம் சீஸ் பொரஸ்டிங்
MILKMAID ½ சிறிய டின்
கிறீம் சீஸ் 400g
விப்ட் கிறீம். 100g
பட்டரை கிறீமாக்கி MILKMAID உடன் மெல்லியதாக சேர்த்து அடிக்கவும். வனிலா எசன்ஸை சேர்க்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் கொக்கோ மற்றும் சிகப்பு நிற உணவு கலரிங்கை சேர்த்து ஒரு பேஸ்ற் செய்யவும். பட்டர் மிக்சருடன் கலக்கவும்.
மீதமுள்ள உலர் சேர்மானங்களை சேர்த்து அரிக்கவும். இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். உலர்ந்த சேர்மானங்களையும் யோகட்டையும் பட்டர் கலவையுடன் சேர்க்கவும். மிகுதியாகவுள்ள யோகட்டை மாக்கலவையுடன் கலக்கு முன் சிவப்பு வினாகிரியுடன் கலக்கவும்.
நன்றாக கலக்கும் வரை பாலையும் சேர்த்து கலக்கவும்.
அவணை முன்கூட்டியே சூடாக்கவும். கப் கேக் தட்டை தயார் செய்யவும்.
160°C அளவு வெப்பத்தில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். றக் ஒன்றில் முழுமையாக ஆற விடவும்.
கிறீம் சீஸை அடிக்கவும். அடிக்கும் போதே MILKMAID ஐ மெல்லியதாக சேர்க்கவும்.
Step 8
விப்ட் கிறீமையும் சேர்க்கவும். விருப்பம் போல அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.