drip
bestweb award
BUY NOW

இலங்கையுடனான நெஸ்ட்லே MILKMAIDஇன் இனிய உறவு 100 வருடங்கள் மட்டுமே இருக்கின்ற வேளையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக நாமத்தின் ஆரம்பத்தினை அமெரிக்காவின் இல்நொயிஸ் மாநிலத்தில் டிக்ஸன் பகுதியில் ஜோர்ஜ் ஹம் பேஜ் மற்றும் சூரிச்சில் அமெரிக்காவின் துணை ஆலோசகராகவும், வர்த்தக தூதுவராகவும் இருந்த அவருடைய சகோதரர் சார்ள்ஸ் ஆகியோர் 1866ஆம் ஆண்டு கண்டறிந்து, கட்டிப் பாலை ஏற்றுமதி செய்ய சாம் நகரில் அங்லோ சுவிஸ் நிறுவனத்தை உருவாக்கினார். ஐரோப்பாவில் அமையப் பெற்ற கட்டிப் பால் நிறுவனமாக அங்லோ-சுவிஸ் நிறுவனம் உள்ளது. ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளிற்கு பால் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதே புதிய மற்றும் நவீன நிறுவனத்தின் இலக்காக இருந்தது.

அவற்றில் ஒரு முக்கியமான வர்த்தக நாமமானது உலகளாவிய ரீதியில் MILKMAID என அறியப்படுகின்றது. MILKMAID கொண்ட பால் பக்கட்டுக்களை பாரம்பரிய பிரதிநிதித்துவம் செய்வதாக இலச்சினை உள்ளது. பால் விற்கப்பட்ட அங்லோ-சுவிஸ் நாட்டின் மொழியிலிருந்து MILKMAID என்ற சொல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (La Laitière, La Lechera, Die Milchmädchen…). 1905ஆம் ஆண்டில் ஹென்றி நெஸ்ட்லே எஸ்.ஏ., வெவேயுடன் அங்லோ-சுவிஸ் கட்டிப் பால் நிறுவனம் ஒன்றிணைக்கப்பட்டது. அன்று முதல் MILKMAID என்ற பெயர் நெஸ்ட்லே MILKMAID என மாறியது.

Tamil
Image: